Posts

வாழ்வில் முன்னேற உதவும் அனைவருக்கும் உதவக்கூடிய தன்னம்பிக்கை கதை - SWOT (தாத்தா கொடுத்த சிலை)

  ஒரு ஊரில் ஒரு வயதான தாத்தா இருந்தார். அவருக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் குமார். அவன் மிகவும் சோம்பேறியாக இருந்தான். பலர் பல அறிவுரை சொல்லியும் கேட்காமல் இருந்தான். ஒரு நாள் அவனுடைய தாத்தா அவனைக் கூப்பிட்டு குமார் நான் உனக்கு ஒரு புராதான பொருளை பரிசாக தருகின்றேன் இதை நீ எப்பொழுதும் வைத்துக் கொள் . இதனுடைய விலை மதிப்பு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தேரும். இது என்னுடைய தாத்தா எனக்கு பரிசாக கொடுத்தார் . இதனுடைய வயது 200 வருடங்களுக்கு மேல் இருக்கும். இது ஒரு ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிலை என்றார். காலங்கள் சென்றன பேரன் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் நிறைய கடன்கள் வாங்கி பண கஷ்டத்தில் மாட்டிக் கொண்டான். எனவே அவன் அந்த சிலையை விற்க முடிவு செய்தான் ஒரு அடகு கடையில் சென்று அதனை விலைக்கு எடுத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டான். அவர் அதை பரிசோதித்து விட்டு ஐந்தாயிரம் ரூபாய் எடுத்துக் கொள்வதாக சொன்னார். அவன் அதை விற்க மனம் இல்லாமல் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தான். அதை விலை கேட்டு மற்றொருவன் வந்தான் அதனை மூன்றாயிரம் ரூபாய்க்கு எடுத்துக் கொள்வதாக கூறினான். அதைக் குமார் தர மறுத்து விட்டா...